8

தாத்தாவின் சொத்து – எம்.கே.குமார்

mk kumar1

 

தாத்தாவின் சொத்து

தள்ளுவண்டியில் ஒதுங்கியிருக்கும்
தாத்தா என்னையே பார்க்கிறார்

எனது பிம்பம் ஒரு நடைபிணம் போல
அவர் கண்களை அடைகிறது
முகத்தில் ரேகைகள் விரிகின்றன

விரக்தியோ வேதனையோ
மெதுவாக முகிழ்கிறது அது
எழுந்து நடக்க முயல்கிறார்

எதையோ எட்டிப்பிடித்து
இறுக்கிக்கொள்கையில்
தரையில் கால்கள்
பதிந்து கொள்கின்றன
வேர்களுக்குள்
சிக்கிக்கொண்டது
போல தடுமாறுகிறார்

நினைவிலிருந்து தாத்தா
பொத்தென்று விழ
இருக்கைவண்டி
மெலிதாக அதிர்கிறது

தாத்தா என்னையே பார்க்கிறார்.

 

Filed in: கிளிஷே - கவிதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

8 Responses to "தாத்தாவின் சொத்து – எம்.கே.குமார்"

 1. AnithaRaj says:

  //தரையில் கால்கள்
  பதிந்து கொள்கின்றன
  வேர்களுக்குள்
  சிக்கிக்கொண்டது
  போல தடுமாறுகிறார்// அருமையான வரிகள்.

 2. AnithaRaj says:

  //விரக்தியோ வேதனையோ
  மெதுவாக முகிழ்கிறது அது
  எழுந்து நடக்க முயல்கிறார்//
  அது என்பது இங்கே எதை குறிக்கிறது. தாத்தாவை குறிப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அப்படி என்றால் அஃறினையில் இடையில் குறிப்பது ஏதோ போல் இருக்கிறது

  எனது கணிப்பு தவறென்றால் விளக்கம் தாருங்கள்

 3. AnithaRaj says:

  //எனது பிம்பம் ஒரு நடைபிணம் போல
  அவர் கண்களை அடைகிறது// அருமையான கையாடல்

 4. தாத்தாவின் சொத்தைவிட தாத்தாவை காப்பாற்றுங்கள்…. மனம் அதிராமலாவது இருக்கும்

 5. MK says:

  Thanks Anita..

  • பனசை நடராஜன் says:

   நன்று குமார்.. இன்னும் நான் வளரணும்
   வளரணும்..

 6. MK says:

  அனைவருக்கும் நன்றி.

  அனிதா, அது புன்னகை.

 7. MK says:

  நன்றி கருணாகரசு,

  தாத்தாவின் சொத்து என்பதே தாத்தா மட்டும் தான் இக்கவிதையில். :-)

  நன்றி பனசை! அப்படியே நீங்க வளரும்போது என்னையும் சேத்துக்குங்க., நானும் இன்னும் எவ்வளவோ வளரணும். :-)

Leave a Reply

Submit Comment