4

நிராயுதபாணி!- பாரதி மூர்த்தியப்பன்

Book_Release_Mar_2014_ (116)

நிராயுதபாணி! 

என் காயங்களுக்கு காரணமான
அவன் அம்புகளை நான் சேகரிக்கிறேன்.
வீட்டு சுவரில் படங்களாகவும்,
திரைச்சீலைகளை வசிகரபடுத்தும் தையல்களாகவும்,
என் சேலைக் கரையின் தொங்கல்களாகவும்,
உதட்டு சாயமாகவும்
உள்ளாடை சித்திரங்களாகவும்
கவிதையாய் பாதுகாக்கிறேன்
வியுகமாய் சுழலும் அவற்றின்
ஆயுள் எண்ணி வருந்துகிறேன்.

மயிலிறகுகள் நிறைந்திருக்கும் – என்
அம்பாராத்தூணியில் எப்போதும்
அம்புகளுக்கு இடமில்லை.
சொற்களை போலவே அம்புகளையும்
நான் இழக்க விரும்பவில்லை
நிராயுதபாணியாய் அம்புகளை
எதிர் கொள்ள ஒருபோதும் வெட்கமில்லை!

 

Filed in: கிளிஷே - கவிதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

4 Responses to "நிராயுதபாணி!- பாரதி மூர்த்தியப்பன்"

 1. AnithaRaj says:

  //நிராயுதபாணியாய் அம்புகளை
  எதிர் கொள்ள ஒருபோதும் வெட்கமில்லை!//இரசித்த வரிகள் பாரதி.

 2. AnithaRaj says:

  //வியுகமாய் சுழலும் அவற்றின்
  ஆயுள் எண்ணி வருந்துகிறேன்// சொல்லாடல் அருமை

 3. AnithaRaj says:

  //வீட்டு சுவரில் படங்களாகவும்,
  திரைச்சீலைகளை வசிகரபடுத்தும் தையல்களாகவும்,
  என் சேலைக் கரையின் தொங்கல்களாகவும்,
  உதட்டு சாயமாகவும்
  உள்ளாடை சித்திரங்களாகவும்//
  இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் அத்தியாவசியங்கள் இல்லை………… ஆனால் இத்தோடு கவிதையாகவும் சேர்ந்து இருப்பது சிறிது நெருடுகிறது. ஒரு எழுத்தாளனுக்கு கவிதைகள் சுவாசம் போன்று தானே இருக்கும்.

 4. MK குமார் says:

  நன்று பாரதி..

  வார்த்தைகளின் தேர்ந்தெடுத்தமை மிக நன்று.

Leave a Reply

Submit Comment