13

மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா

kiruthika

 

மகளின் ஒரு கேள்வி

“அம்மா! உங்களுடைய பார்வையில் நான் எதிர்காலத்தில் என்னவாக இருப்பேன்?” என்று சென்ற மாதம் பதினொன்றே வயதை எட்டிய என் அருமை மகள், நிலாவின் கேள்வியில் நான் உறைந்தேன்.

பகல் முழுவதும் அலுவலகத்திலும், பள்ளி வேலைகளிலும் முழுகியிருக்கும் நானும் என் பெண்ணும் மனம் விட்டுப் பேசுவதும், மறுநாளைப் பற்றிய கனவுகளில் லயிப்பதும் இரவு தூங்கும் சமயம் தான்.

குழந்தையாக இருந்தபொழுது நான் அவளுக்கு புராணக் கதைகள் சொன்னதுண்டு. அதைக் கேட்டுக்கொண்டே அவள் தூங்கிவிடுவாள். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களை அறியாமலேயே அது கேள்வி-பதில் நேரமாக நிலைமை மாறிவிட்டது. நிலா கேள்விகள் கேட்டு நான் பதிலளிப்பதும் உண்டு. அவளுடைய கேள்விகளுக்கு அவளே பதிலளித்துக் கொள்வதும் உண்டு.

சில சமயம் என்னைச் சிரிக்க வைப்பாள், மற்றொரு சமயம் வெகு நேரம் தூங்காமல் அடம்பிடித்து என்னைப் பொய்யாகக் கோபப்படவும் வைப்பாள். முற்றிலும் வினோதமாக, நிலாவின் இன்றைய கேள்வி, என்னைச் சிந்திக்க வைத்தது.

நிலாவின் இந்த ஒரு கேள்வி என் மனதிற்குள்ளே பல கேள்விகளை எழுப்பியது. அவளுக்கு நான் அம்மாவாக இருந்தாலும் நிலா வளர்ந்தபிறகு என்னவாக இருக்க வேண்டுமென்று நான் எப்படி முடிவு செய்ய முடியும்? இது நிலாவின் வாழ்க்கை. என் வாழ்க்கை என் கையில். அவளுடைய வாழ்க்கை அவளுடைய கனவு அல்லவா?

அவள் வளரும்வரை நான் அவளுக்குத் துணையாக இருக்கிறேன். ஒரு தாயாக என் மகள் உலகைப் புரிந்து கொள்ள உதவி புரிகிறேன். குழந்தை வளர்ந்து தனி ஆளாக சுதந்திரமாக வாழும் மனவலிமை பெறும்வரை அவளைப் பாதுகாக்கிறேன். அவளுடைய உலகை உருவாக்கவோ, வேறுபடுத்தவோ, நான் யார்?

“அம்மா, சொல்லுங்கம்மா” என்று எதிர்பார்ப்புடன் கூடிய தண்மையான குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

உடனே “நான் எதுவும் நினைக்கவில்லை. உனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது?” என்று நிலாவிடம் கேட்டேன்.

“நிறைய பெற்றோர்கள் தங்களுடைய மகளோ மகனோ ஒரு மருத்துவராக, பொறியாளராகவோ அல்லது ஒரு வழக்கறிஞராக வரவேண்டும் என்று கனவு காண்பர். அதுதான் உங்களுடைய எண்ணத்தை அறிய விரும்புகிறேன்” என்று கூறினாள்.

நானும் இந்தக் கருத்தை பல முறை கேட்டிருக்கிறேன். அது எப்படி சாத்தியம் என்று வியந்தும் இருக்கிறேன்.

அவளுடைய தலையைத் தடவியபடி “என் பார்வையில் நீ உன் சொந்தக் காலில் நிற்பாய். நல்ல குடிமகளாக மகிழ்ச்சியுடன் இருப்பாய். அவ்வளவுதான்!” என்று பதில் கூறியதும் நிலாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீற்று.

இருந்தாலும் நிலா தொடர்ந்து, “அம்மா, அவசரம் இல்லை. யோசித்து நாளைக்குச் சொல்லுங்கள்” என்றாள். அவளுடைய ஆசையும் என்னுடைய எண்ணமும் ஒத்திருக்க வேண்டுமே என்ற ஆவல் அவள் கண்களில் மின்னியது.

கவலையில்லாமல் பட்டாம்பூச்சியைப் போலச் சென்ற வருடம் வரை சுற்றித்திரிந்த நிலா, என் மனதை வருத்தப் படுத்தக்கூடாது என்று நான் யோசிக்க அவகாசம் கொடுப்பதாகக் கூறியது என்னை ஆச்சரியப்படுத்தியது. நிலா பொறுப்பான பெண்ணாக வளர்ந்து வருவது எனக்குப் புரிய வந்தது.

சில மணித்துளிகள் யோசித்த நான், ஒரு தாயாக நான் என் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் நான்தான் என் மகளுக்கு பொருத்தமான துறையையோ கலையையோ தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டுமோ என்று குழம்பினேன்.

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தருக்கும் தனித்திறமையும் ஆசைகளும் இருக்கும். என் மகளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் தேர்வு செய்யும்பொழுது அதற்குரிய பயிற்சிகளைப் பெறுவதற்கு நான் உதவ வேண்டும். மற்ற துறைகளிலும் அடிப்படை அறிவைப் பெற வலியுறுத்த வேண்டும். மாறாக அவளைத் திசை திருப்பக்கூடாது.

அந்த எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. நிலாவின் அப்பாவும் அவளுடைய கனவை ஒட்டி வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பாள் என்றுதான் நினைக்கிறார். எங்கள் எண்ணம் இப்படியிருக்க எங்கள் குழந்தை இவ்வளவு தூரம் யோசித்து ஐயப்படுவாள் என்று நான் நினைக்கவில்லை.

இந்தக் கருத்தை அவளைச் சுற்றியிருக்கும் தோழிகள் மற்றும் உற்றார், உறவினர்களிடமிருந்து பெற்றிருக்கிறாள் என்று எனக்குப் புரிகிறது. ஒரு குழந்தையை வளர்த்துவது தாய், தந்தை மட்டுமல்ல. ஒரு சமுதாயமும் பங்கு கொள்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு அவளுக்கு எல்லா உரிமையும் சுதந்திரமும் உண்டு என்று நிலாவிற்கு தெளிவாக உணர்த்த வேண்டியது என் கடமை.

இந்தக்  கேள்வி அவளுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதால், நிலா கேட்டுக்கொண்ட படி அவள் கொடுத்திருக்கும் நாள் அவகாசத்தை உபயோகித்து நான் தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.

 

 

Filed in: கிளிஷே - கதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

13 Responses to "மகளின் ஒரு கேள்வி – கிருத்திகா"

 1. //அந்த எண்ணம் எனக்குத் துளியும் இல்லை.//

  இந்த பதிவின் மையபகுதியாக மேற்கண்ட வரிகளை உணர்கிறேன்.

  தன் கனவுகளை நிறைவேற்றும் கருவியாகவே குழந்தைகளை
  பயன்படுத்தும் இந்த அவசர உலகத்தில் ….

  தன் குழந்தையின் கனவுக்கு துணையாக(மட்டுமே) நிற்கும் தாய்மையின்
  தெளிவிற்க்கு என் பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்..!

  • நீங்கள் கதையின் கருத்தை சரியாக உள்வாங்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

 2. கீழை அ.கதிர்வேல் says:

  //இந்தக் கேள்வி அவளுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதால், நிலா கேட்டுக்கொண்ட படி அவள் கொடுத்திருக்கும் நாள் அவகாசத்தை உபயோகித்து நான் தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.// எழுத்தாளர் முடிவை சொல்ல வேண்டியதில்லை! அவர் என்னவாக ஆகவேண்டுமென்பதை அந்தத் தாய் பாத்திரம் மூலம் சொல்லாமல் சென்றதே சிறப்பு!

 3. kalaivani says:

  kiruthika

  very happy to see your post

  very thoughtful answer to ur child

  ur child must be very proud of her parents

  may god bless you all

 4. kalaivani says:

  kiruthika

  very glad that ur post has been publshed.
  very thoughtful answer

  my for you to continue ur writing

  anbudan
  Vani
  Erode

 5. Saravanan says:

  Good thought on raising the kids!

 6. மிகவும் அருமையான கதை…
  வாழ்த்துக்கள்

 7. Even if this is a ‘kadhai’, I like the way u have provoked the minds of ambitious mothers. Children need guidance and care but no parental decisions. Something which each and every parent should realize ! Expect more such articles.

  • ஒரு பெற்றோரின் பார்வையில் இருந்து புரிந்துகொண்டு விமர்சனம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வாழ்த்து மேலும் நன்றாக எழுத என்னை ஊக்குவிக்கும். நன்றி!

Leave a Reply

Submit Comment